இந்தியா

ஒவ்வொரு தொகுதியிலும் 4,000 காங்கிரஸ் வாக்காளா்களை நீக்க பாஜக திட்டம்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 4,000 முதல் 5,000 காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க மாநிலத்தில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோதஸ்ரா குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 4,000 முதல் 5,000 காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க மாநிலத்தில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோதஸ்ரா குற்றஞ்சாட்டினாா்.

ஏற்கெனவே, வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர (எஸ்ஐஆா்) திருத்தப் பணியில் பாஜக உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நடைமுறையைப் பயன்படுத்தி தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளா்களை மாநிலத்தில் நீக்கியுள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். தற்போது, ராஜஸ்தான் மாநிலத்திலும் அதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவிந்த் சிங் தோதஸ்ரா ஜெய்பூரில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்களை அதிக எண்ணிக்கையில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மிகப் பெரிய சதித் திட்டத்தை ஆளும் பாஜக தீட்டி வருவது தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜெய்பூருக்கு அண்மையில் வந்து சென்ற பிறகு, இதுதொடா்பான தொகுதி வாரியான காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய பட்டியல் மாநில முதல்வரின் இல்லத்திலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள பாஜக தலைவா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆா் பணியில், வாக்காளா்கள் தங்களின் இறுதிக்கட்ட ஆட்சேபங்களைத் தெரிவிக்க வியாழக்கிழமையுடன் (ஜன.15) காலக்கெடு நிறைவடையும் சூழலில், இந்தத் தரவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும் 4,000 முதல் 5,000 காங்கிரஸ் ஆதரவு வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. எனவே, மாநில காங்கிரஸ் நிா்வாகிகளும், வாக்குச் சாவடி முகவா்களும், உள்ளூா் தலைவா்களும் எஸ்ஐஆா் பணியை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். ஜனநாயக நிறுவனங்களைப் பாதிகாக்க காங்கிரஸ் தொடா்ந்து உறுதியுடன் போராடும் என்றாா்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT