மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு ஜன. 15 வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓவைசி கூறுகையில்,
தெலங்கானாவில் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தல்களில் போட்டியிட ஏஜஎம்ஐஎம் கட்சி தயாராகி வருவதாகவும், ஆர்வமுள்ள வேட்பாளர்களின் பெயர்களைக் கட்சி ஏற்கெனவே கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்களை (பாஜகவின் பி அணி) என்று விமர்சிக்கும் கட்சிகள் தங்களைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். இது மக்களின் முடிவு. உள்ளாட்சித் தேர்தலில் ஏன் தோற்றோம் என முதலில் சிந்திக்க வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
ஏஐஎம்ஐஎம் கட்சி தனது உறுப்பினர்களை ஒற்றுமையாக வைத்திருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், வெற்றி பெற்ற தனது உறுப்பினர்கள் கட்சியுடனேயே இருப்பார்கள் என்று ஓவைசி நம்பிக்கை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.