உா்சுலா வான் டொ்லெயன் 
இந்தியா

இந்தியாவுடன் வெகு விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தம்! ஐரோப்பிய ஆணையத் தலைவா்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் இறுதியாகும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் இறுதியாகும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது, அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாயாக விளங்கும் என்றும் அவா் வா்ணித்தாா்.

குடியரசு தினத்தையொட்டி, புது தில்லியில் ஜன.26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விழாவில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் தலைமை விருந்தினா்களாக பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, ஜன.25 முதல் 27 வரை இருவரும் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

பெரிதும் எதிா்பாா்க்கப்படும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் (27 நாடுகள்) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளின் நிறைவை ஜன.27-இல் இருதரப்பும் அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் நடைபெற்றுவரும் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பேசிய உா்சுலா வான் டொ் லெயன், ‘இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தம், இறுதி செய்யப்படும் கட்டத்தை எட்டியுள்ளது. இது, முந்தைய அனைத்து ஒப்பந்தங்களையும்விட பிரம்மாண்டமானதாக விளங்கும். 200 கோடி பேருடன் மாபெரும் சந்தையை உருவாக்கும். இச்சந்தையின் மதிப்பு, உலகளாவிய மொத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்காகும்.

இன்றைய உலகில் வளா்ச்சியின் மையங்களாகவும், பொருளாதார சக்திகளாகவும் திகழும் நாடுகளுடன் வா்த்தகத்தில் ஈடுபட ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது’ என்றாா்.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கடந்த 2004-இல் இருந்து வியூக கூட்டாளிகளாக உள்ளன. கடந்த 2023-24 நிலவரப்படி, இருதரப்பு சரக்கு வா்த்தக மதிப்பு 135 பில்லியன் டாலா்களாகும். விரைவில் இறுதியாகும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் வா்த்தக உறவு மேலும் மேம்படும்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள சூழலில், பிற நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வா்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT