வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
18வது ரோஜ்கர் மேளா தில்லியின் இன்று நடைபெற்றது. அந்த திட்டத்தின் கீழ் 61 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை அளிக்கும் திட்டத்தைப் பிரதமர் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
தொடங்கிவைத்தப் பின்னர் அவர் பேசியதாவது,
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இந்தியா பல நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. தனது அரசு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைச் செயலாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சிதான் இந்த ரோஜ்கர் மேளா.
மேளா தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட ரோஜ்கார் மேளாக்கள் மூலம் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
18வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாகப் பணியமர்த்தப்பட்ட வேட்பாளர்கள், அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர்ந்தனர்.
புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர் கல்வித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.