தில்லி யமுனை ஆற்றில் அடுத்த மாதத்தில் சொகுசுப் படகுப் பயணம் தொடங்கவிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கிவைத்த கபில் மிஸ்ரா, ”தலைநகரின் ஏழு வரலாறுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
"நகருக்கு வருகை தரும் ஒரு சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க வேண்டும். சுற்றுலா வருபவர்களின் பார்வையில் நகரின் கண்ணோட்டத்தை சரியாக வெளிப்படுத்த வேண்டும். காற்று மாசுபாடு மற்றும் நதி நீர் மாசுபாடு ஆகிய இரண்டு பிரச்னைகளும் தில்லியில் உள்ளன.
நதி நீர் மாசுபாட்டைத் தடுக்க மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது இதுவே முதல்முறை. உள்துறை அமைச்சர் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், சுத்திகரிக்கப்படாத ஒரு சொட்டு நீர்கூட ஆற்றில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இலக்கு.
உலகத்துக்கு இதுவரை யாரும் வெளிப்படுத்தாத சுத்தமான நதிப் பாதை எங்களிடம் உள்ளது. மக்கள் நதியுடன் இணைக்கப்பட வேண்டும். தில்லியில் அடுத்த மாதம் சொகுசுப் படகு சேவையைத் தொடங்கவுள்ளோம். நகரில் முதல்முறையாக நதிப் பயண அனுபவத்தை மக்களுக்கு அளிக்கவுள்ளோம். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத இறுதியில் தலைநகர் நதிப் பயண அனுபவத்தை தொடங்கும்.
சர்வதேச அனுபவங்களை உருவாக்க எங்களிடம் ஏற்கெனவே திட்டம் உள்ளது. அதை நோக்கிச் செயல்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.