முகப்பு
இந்தியா

பிகாரின் பங்கிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோர்?

பிகாரின் பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாகத் தகவல்...

Updated On : 2 ஜூலை 2026, 9:05 pm IST
பிரசாந்த் கிஷோர் - ANI
பகிர்:

பிகாரில் நடைபெறவுள்ள பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிகாரில் பங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட பங்கிபூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 2) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பங்கிபூர் தொகுதியில் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்து வரும் ஜூலை 5 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதியதாகப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Prashant Kishor, leader of the Jan Suraaj party, is set to contest the upcoming by-election for the Bankipur Assembly constituency in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments