முகப்பு
இந்தியா

மாலுமியின் உடலுறுப்புகள் மாயம்; முழுமையான விசாரணை தேவை: வெனிசுவேலாவுக்கு இந்தியத் தூதரகம் கோரிக்கை!

மாலுமியின் உடலுறுப்புகள் மாயமான விவகாரத்தில் முழுமையான விசாரணை தேவை என்று வெனிசுவேலா அதிகாரிகளுக்கு இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்தது பற்றி...

Updated On : 3 ஜூலை 2026, 12:01 pm IST
உயிரிழந்த மாலுமி ராகேஷ் சௌகான். - படம் - எக்ஸ்
பகிர்:

மாலுமியின் உடலுறுப்புகள் மாயமான விவகாரத்தில் முழுமையான விசாரணை தேவை என்று வெனிசுவேலா அதிகாரிகளுக்கு இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ராகேஷ் சௌகான். இவர் தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் ​​மாரடைப்பு அல்லது விபத்து காரணமாக வெனிசுவேலாவில் உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெரும் போராட்டத்தக்குப் பிறகு, அவருடைய உடல் இந்தியா கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆகையால், ராகேஷின் உடல் மீண்டும் கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வில் கிடைத்த தகவலின் படி, அவரது உடலில் உடலுறுப்புகள் மாயமானது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து வெனிசுவேலாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்ததாவது:

உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சௌகான் இறப்பு குறித்தும் அவரது உடலுறுப்புகள் மாயமானது குறித்தும் உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வெனிசுவேலா அதிகாரிகளுக்கு இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுக்கிறது. இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததிலிருந்து இதுதொடர்பான முழுமையான விசாரணை வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, “தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் உள்பட பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் என எல்லா இடங்களிலும் புகார் அளித்தோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை” என்று ராகேஷ் சௌகானின் மனைவி நேற்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian Embassy has requested Venezuelan authorities to conduct a thorough investigation into the matter regarding the disappearance of the sailor's body parts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments