நிதி முறைகேடு புகார்கள் பொய்யெனில் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை: விஷ்வ ஹிந்து பரிஷத்
அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக...
ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக பிரியங்கா காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்துமாறு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அயோத்தி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அயோத்தியில் உள்ள துணை காவல்துறை கண்காணிப்பாளருக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
அதில், ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக் கோரியுள்ளார். வெறுப்புணர்வைத் தூண்டும் நோக்கத்துடன் குற்றச்சாட்டு வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ரூ. 20,000 கோடி நிதி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் புள்ளிவிவரங்களுடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை அணைத்து, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள காணிக்கைகளை முறைகேடு கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் செய்திருக்க முடியுமா அல்லது செல்வாக்கான நபர்களும் இதில் தொடர்பில் உள்ளனரா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிலில் விலையுயர்ந்த பொருள்கள் மட்டுமின்றி ரொக்கமாக ரூ. 200 கோடி திருடப்பட்டதாக கேஜரிவால் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரும் இதேபோன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த அனைவரும் அதற்குரிய ஆதாரங்களை வழங்கினால் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும். எந்த ஆதாரங்களுமின்றி பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தது கண்டறியப்பட்டால், அதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Action against opposition parties if allegations of financial irregularities are false: Vishwa Hindu Parishad
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.