முகப்பு
இந்தியா

ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கு: குற்றவாளியின் வீட்டில் நகை, ஆவணங்கள் பறிமுதல்!

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக...

Updated On : 28 ஜூன் 2026, 5:04 pm IST
அயோத்தி ராமர் கோயில் - கோப்புப்படம்
பகிர்:

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டின்னு யாதவ் வீட்டில் நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில் நிதி மற்றும் நன்கொடைகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் 8 பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளி ராம்ஷங்கர் யாதவ் என்கிற டின்னு யாதவ் வீட்டில் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக் காவலில் 3 நாள்கள் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

சோதனை பற்றி காவல்துறை தெரிவித்ததில், கோவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய டின்னு யாதவ் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

இன்று மாலைக்குள், குற்றவாளிகள் அனைவரது வீட்டிலும் கைப்பற்றப்பட்டவை பற்றி முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவில் நிதி கையாடல் தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான கிருஷ்ணா மோகன் அளித்த புகாரின் அடிப்படையில், வியாழனன்று அயோத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தனது ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ராம்ஷங்கர் யாதவ், அறக்கட்டளை ஊழியர்களான அனுகல்ப் மிஷ்ரா, லவ்குஷ் மிஷ்ரா, மனிஷ் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமாஷங்கர் மிஷ்ரா, அவினாஷ் சுக்லா மற்றும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பான முழு விவரங்களும் வெளிவரும் என்றும் விசாரணையில் மேலும் சிலரின் பெயர்கள் வெளிவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

summary

Ram Temple fund misappropriation case: Jewelry and documents seized from the accused's house!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments