அயோத்தி ராமர் கோயில் சிஇஓ பதவிக்கு 5,500 விண்ணப்பம்! என்னென்ன தகுதிகள்?
அயோத்தி ராமர் கோயில் சிஇஓ பதவிக்கு 5,500 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்பது பற்றி
அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளைக்கு புதிய தலைமை செயல் அதிகாரி பதவிக்கு இதுவரை 5,500 பேர் விண்ணப்பித்திருக்கிறார்களாம். இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறார்கள்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் மூன்று பேர் கொண்ட குழு, 5500 விண்ணப்பங்களையும் பரிசீலித்து வருகிறது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
நிர்வாக மற்றும் மேலாண்மை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்
இவைதான், அயோத்தி ராமர் கோயில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவரின் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
சிஇஓவை நியமிக்கும் குழுவினர், கூடுதலாக சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்களாம். அதுதான், சநாதனம் மற்றும் இறைவன் ராமர் மீதான அதீத நம்பிக்கை.
முதலில், அனுபவம், தகுதி ஆகியவற்றைக் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் அவர்களிடம் பேசியிருக்கிறோம், அதில் சிலர் நேர்காணலுக்கு அழைக்கப்படவிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக 5,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை தனித்தனியாக பிரிக்காததால் எத்தனை பெண்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற தரவுகள் தெரியவரவில்லை.
சிஇஓ பதவி ஏன்?
அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இது தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளன.
முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலா் பதவியிலிருந்து சம்பத் ராயும், அறங்காவலா் பதவியில் இருந்து அனில் மிஸ்ராவும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தில் இருவரின் ராஜிநாமா கடிதங்களும் ஏற்கப்பட்டன. அத்துடன், இடைக்கால பொதுச் செயலராக அறக்கட்டளை உறுப்பினா் கிருஷ்ண மோகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அயோத்தி கோயிலின் தினசரி நிா்வாகத்தைக் கையாளவும், நிதிசாா் நடவடிக்கைகளை நவீனப்படுத்தவும் புதிதாக தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்கும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பதவிக்கு தகுதியானவரைத் தோ்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி விஷ்ணுகாந்த் சதுா்வேதி, ராய்பூா் என்ஐடி முன்னாள் தலைவா் சுரேஷ் ஹவாரே ஆகிய 3 உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இன்று நடைபெறும் அறக்கட்டளையின் உயா்நிலைக் கூட்டத்தில் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
5,500 applications for the Ayodhya Ram Temple CEO post! What are the qualifications?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.