FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடலை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளது குறித்து...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:28 pm IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்... - PTI
பகிர்:

அயோத்தி ராமர் கோயிலின் நன்கொடை முறைகேட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளன.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை பணத்தில் நீண்டகாலமாக முறைக்கேடு நடந்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் மற்றும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று (ஆக. 12) போராட்டம் நடத்தியுள்ளன.

Advertisement

Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா உள்பட ஏராளமான உறுப்பினர்கள் கையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Congress-led opposition parties have staged a protest in Parliament against irregularities regarding donations for the Ayodhya Ram Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments