முகப்பு
இந்தியா

அயோத்தி நன்கொடை திருட்டை மூடிமறைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சி: காங்கிரஸ்

அயோத்தி நன்கொடை திருட்டு குறித்து காங்கிரஸ் கூறுவது பற்றி..

Updated On : 7 ஜூலை 2026, 3:30 pm IST
அயோத்தி முறைகேடு - file photo
பகிர்:

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பெறப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் பாஜக-ஆர்எஸ்எஸ் செயல்படுவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் நன்கொடைகள் திருடப்பட்ட சம்பவம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

Advertisement

Advertisement

சிலர் பதவி விலகுவது, பெயரளவிலான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த விவகாரம் மூடிமறைக்கப்படுவதாகவும், உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும், சங்கராச்சாரியார்கள், தர்மாச்சாரியார்கள், சாதுக்கள் மற்றும் மதப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும்.

உத்தரப் பிரதேச அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ராமர் கோயிலுக்காகப் பெறப்பட்ட ரொக்கம், பொருள்கள் வடிவிலான நன்கொடைகள் குறித்த முழுமையான கணக்கு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் ஹிந்தில் பதிவிட்டுள்ளார்.

The Congress on Tuesday accused the BJP-RSS of "whitewashing" the theft of donations at the Ram Temple in Ayodhya in order to protect the "real culprits".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments