முகப்பு
இந்தியா

ரயில் டிக்கெட்டை வீட்டிலேயே மறந்துவிட்டீர்களா? பயணத்தின் நடுவே உதவும் இந்திய ரயில்வே!

ரயில் பயணத்தின்போது முன்பதிவு செய்த டிக்கெட்டை வீட்டிலேயே மறந்துவிட்டால் செய்ய வேண்டியவை.

Updated On : 8 ஜூலை 2026, 6:36 pm IST
டிக்கெட் பரிசோதகர் - கோப்புப் படம்
பகிர்:

பயணிகள் சிலர் ரயில் பயண அவசரத்தில் சில சமயங்களில் முன்பதிவு மையங்களில் நேரடியாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை வீட்டிலேயே விட்டுச் சென்றுவிடுவர். இதுபோன்ற சூழ்நிலைகள் பெரும்பாலும் பயணிகளுக்கு அதீத பதற்றத்தையே கொடுக்கும்.

இதனைத் தவிர்க்க இந்திய ரயில்வேயின் தற்போதையை விதிமுறைகள், பயணிகளுக்கு உதவும் வழிமுறைகளை தெளிவாக வழங்குவதாகதென்கிழக்கு மத்திய ரயில்வே செயல்பாட்டு மண்டலத்திலுள்ள ராய்ப்பூர் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு பயணி ரயில் பயணத்தின் போது ரயில்வே முன்பதிவு கவுன்டரில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் டிக்கெட்டை எடுத்துசெல்ல மறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ, அவர்கள் புறப்பட்ட ரயில் நிலையத்தின் மாஸ்டரிடம் அசல் டிக்கெட்டை காண்பிக்கலாம்.

Advertisement

Advertisement

நடைமுறையில் உள்ள ரயில்வே விதிகளின்படி டிக்கெட்டை சரிபார்த்தவுடன், நிலைய அதிகாரி குறிப்பிட்ட ரயில் செல்லும் வழித்தடத்தில் உள்ள அடுத்த ரயில் நிலையத்திற்கு உரிய தகவல்களை அனுப்புவார். இந்த அதிகாரப்பூர்வத் தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பயணி எந்த இடையூறுமின்றித் தனது பயணத்தைத் தொடர முடியும். அதற்குரிய நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகள் எடுப்பார்கள் என மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே முன்பதிவு மையங்கள் மூலம் வழங்கப்பட்ட அசல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி கண்டிப்பாகப் பொருந்தும். ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட மின் - பயணச்சீட்டுகளுக்கு இது பொருந்தாது.

இதில், தங்களின் டிக்கெட்டை மறந்துவிட்ட பயணிகள், உடனடியாக ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் அதுபற்றி தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு அசல் டிக்கெட்டை, அவர்கள் புறப்பட்ட நிலைய மாஸ்டரிடம் காண்பிக்கச் சொல்ல வேண்டும்.

இதுபற்றி மேலதிக தகவல்கள் மற்றும் உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் அதிகாரப்பூர்வ ரயில்வே உதவி எண் 139- ஐ தொடர்பு கொள்ளலாம். பயணிகள் பாதுகாப்பான, தொந்தரவில்லாத பயணம் மேற்கொள்வதில் இந்திய ரயில்வே உறுதியாக உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல, சிரமங்களைத் தவிர்ப்பதற்கு பயணிகள் தங்களின் பயணத்தை தொடங்கும் முன் பயணச்சீட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய ஆவணங்களை சரிபார்க்குமாறு இந்திய ரயில்வே அறிவுறுத்துகிறது.

summary

Forgot your train ticket? Indian Railways comes to your aid mid-journey!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments