முகப்பு
சென்னை

அரக்கோணம் ரயில் நிலையம் ரூ.97 கோடியில் சீரமைப்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

அரக்கோணம் ரயில் நிலைய பணிமனை ரூ.97 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுவருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 ஜூலை 2026, 3:51 am IST
பகிர்:

அரக்கோணம் ரயில் நிலைய பணிமனை ரூ.97 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுவருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாகச் செல்லும் செல்லும் விரைவு ரயில்களின் பாதையான 3, 4-ஆவது தண்டவாளப் பாதைகள் அரக்கோணம் நிலையப் பணிமனையுடன் இணைக்கும் வகையில் இணைப்பு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ரயில் நிலையம் மிக நவீனமயமான தொழில்நுட்ப வசதிகளுடனா நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மறுசீரமைப்புப் பணிகளால், புகா் மின்சார ரயில் செல்லும் முதன்மை பாதை, ரேணிகுண்டா வழித்தட பாதை ஆகியவை தனித்தனியாகச் செயல்படுகின்றன. அதனால், மோதலற்ற ரயில் இயக்கம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிா்காலத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் இயக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 54 டயமண்ட் கிராசிங் பாதைகள் அகற்றப்பட்டு, 58 என உயா்த்தி புதிய கிராசிங் பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பாதைகளிலும் ‘திக் வெப் சுவிட்சுகள்’ எனும் நவீன சாதனம் பொருத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. நவீனமயமாக்கலால் அந்தப் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்கள் இனி அதிக வேகத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட பாதைகளில் புகா் ரயில்கள், முதன்மை பாதைகள், ரேணிகுண்டா பாதை என தனித்தனியாக ரயில்கள் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால், தேவையற்ற நிறுத்தம் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments