தில்லி உணவகத்தில் தீ விபத்து: 10 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
தில்லி உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
தில்லியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு தில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று(ஜூன் 3) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காலை 9.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. சுமார் 8.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீ வேகமாகப் பரவியதால் தீயை அணைக்கவும் தீயில் சிக்கியவர்களை மீட்கவும் சற்று தாமதம் ஏற்பட்டது.
இதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் தரைத் தளத்தில் உணவகம் இயங்கி வந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.