தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்
தில்லியில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்தது தொடர்பாக...
தில்லியில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
தில்லியின் கிழக்குப் பகுதியான ஷாதாராவின் விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர். மேலும், இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “தில்லியின் ஷாதாரா மாவட்டத்தில் நடந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ. 2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Prime Minister Narendra Modi has announced relief for those affected by the fire accident caused by an AC explosion in Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.