FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடி

நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அபாரமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி..

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:37 pm IST
பிரதமர் மோடி - PTI
பகிர்:

நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அபாரமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். 31 மாதங்களில் ரூ. 4,727 கோடி செலவில், 60 லட்சம் பயணிகள் உபயோகப்படுத்தும் வகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 17,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

Advertisement

Advertisement

ஆந்திரப் பிரதேசம் எப்போதும் ஒரு தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளது. இத்திட்டம்

மாநிலத்தின் குறிப்பாக அதன் வடக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு ஒரு ஓடுதளமாக அமையும். இத்திட்டம் சிறிய நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கும் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

மாநில இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். முதலீடு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் தாரக மந்திரம்.

தனியார்த் துறையையும் முதலீடு செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஏனென்றால் முதலீடு அதிகரிக்கும்போது உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கும்போது ஏற்றுமதி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும்போது புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனால் மக்களின் வருமானமும் உயரும். குடும்பங்களின் தரம் மேம்படும்.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபாரமான முன்னேற்றம் கண்டுள்ளது.

2014-ம் ஆண்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-யிலிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 166 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi on Saturday said the country's aviation sector has witnessed extraordinary progress, noting that the number of airports has more than doubled from 74 to 166.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments