மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக விஜய் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Advertisement
Advertisement
''இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.