முகப்பு
இந்தியா

மும்பை: இருக்கை தொடர்பான தகராறில் பயணிக்கு கத்தி குத்து

மும்பையில் இருக்கை தொடர்பான தகராறில் உள்ளூர் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 12 ஜூன் 2026, 9:20 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

மும்பையில் இருக்கை தொடர்பான தகராறில் உள்ளூர் ரயிலில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலிருந்து கோபோலிக்கு வியாழக்கிழமை உள்ளூர் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது இருக்கை தொடர்பான தகராறில் பயணி ஒருவரை சக பயணிகள் கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். கத்திக்குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர், மும்பையின் மஸ்ஜித் பந்தர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் பதக் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ரயில் வங்கணி ரயில் நிலையத்தைக் கடந்தபோது, ​​சரக்கு வைக்கும் பெட்டியில் அமர்வது தொடர்பாக பதக்கிற்கும் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது.

summary

Two persons have been arrested for allegedly stabbing a man on a running Mumbai local train following a dispute over a seat, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.