மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 205 ரன்கள் குவித்துள்ளது.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 205 ரன்கள் குவித்துள்ளது.
ராஜஸ்தான் அணி தனது முக்கியமான ஆட்டத்தில் மும்பையை எதிர்த்து இன்று விளையாடுகிறது. மும்பை வான்கடே திடலில் நடைபெற்றுவரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 27 ரன்கள், சூர்யவன்ஷி 4 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினர்.
Advertisement
Advertisement
அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக்கும் ஏமாற்றம் அளிக்க துருவ் ஜூரல் பொறுப்பாக விளையடி 38 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்தவர்களில் தசுன் ஷனகா (29), ஜோஃப்ரா ஆர்ச்சர் (32) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 205 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் தீபக் சாஹர, ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்த ஆட்டத்தல் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும். தற்போது ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajasthan Royals posted a competitive 205-run target for Mumbai Indians after an aggressive batting display at the Wankhede Stadium in Match 69 of IPL 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.