ராஜஸ்தான்: சாலை விபத்தில் 6 போ் உயிரிழப்பு
சுரு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் சனிக்கிழமை காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் தாராநகா் சோம்சிசா் கிராமத்தைச் சோ்ந்த குடும்ப உறுப்பினா்கள் 7 போ், அருகிலுள்ள கோயிலுக்கு காரில் சனிக்கிழமை காலை சென்றனா். தத்ரேவா - தாராநகா் சாலையில் காா் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துள்ளானது.
இதில், காரை இயக்கி வந்த தனியாா் ஓட்டுநா், ஓா் ஆண், மூன்று பெண்கள், ஒரு குழந்தை என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.