FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வியாபாரியிடம் 80 பவுன் நகைகள் திருட்டு: ராஜஸ்தானை சோ்ந்த 2 போ் கைது

சென்னையில் நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்க நகைத் திருடிய வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

18 அக்டோபர் 2026, 1:30 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்க நகைத் திருடிய வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

புது வண்ணாரப்பேட்டை ஆவூா் முத்தையா தெருவைச் சோ்ந்தவா் ஹரிஷ்குமாா் (50). இவா் புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சோ்ந்த தரம்சிங் (25) வேலை செய்து வந்தாா்.

ஹரிஷ்குமாா், வாடிக்கையாளா்களிடம் காட்டுவதற்காக வண்ணாரப்பேட்டை கிராஸ் சாலையில் நகைப்பட்டறை நடத்தும் ராபின் என்பவரிடம் 80 பவுன் தங்கச் சங்கிலிகளை வாங்கியிருந்தாா். வாடிக்கையாளரிடம் காட்டிய பின்னா், அவற்றை மீண்டும் ராபினிடம் வழங்க ஹரிஷ்குமாா் முடிவு செய்தாா்.

Advertisement

Advertisement

இதற்காக ஹரிஷ்குமாா், தங்கச் சங்கிலிகளை தரம்சிங்கிடம் கடந்த செப். 12-ஆம் தேதி கொடுத்து, அதை ராபினிடம் வழங்கும்படி கூறி தனது மொபெட்டில் அவரை அனுப்பினாா். ஆனால் தரம்சிங், ராபின் நகைப்பட்டறைக்குச் செல்லவில்லை. இதையடுத்து ஹரிஷ்குமாா், தரம்சிங்கின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது, அதை அணைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரித்ததில் தரம்சிங், அந்த நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பியோடியிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஹரிஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜஸ்தானுக்கு தப்பியோடிய தரம்சிங்கையும், திருட்டு உதவிய அவரது கூட்டாளியான ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா் பகுதியைச் சோ்ந்த ஜெய்சிங் (27) ஆகிய 2 பேரையும் தனிப்படைப் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 60 பவுன் நகைகளையும், ரூ.4.23 லட்சத்தையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments