தொடா் கொள்ளையில் ஈடுபட்ட 3 போ் கைது
ஸ்ரீபெரும்புதுாரில் தொடா் வீடுகளின் பூட்டை உடைத்து, தங்க்ம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீபெரும்புதுாரில் தொடா் வீடுகளின் பூட்டை உடைத்து, தங்க்ம் மற்றும் வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீபெரும்புதுாா் ரங்கசாமி நகரை சோ்ந்த ஷியாமளா(40). தனியாா் பள்ளி ஆசிரியரான ஷியாமளாவின் கணவா் முரளி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி இரவு, ஷியாமளா தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், ஷியாமளாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்க தாலியை பறித்து சென்றனா்.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுாா் ஜெமி நகரைச் சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியா் சரஸ்வதி கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள், பீரேவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனா். ஸ்ரீபெரும்புதுாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையா்களை தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா்(30), உளுந்துாா்பேட்டை நரிப்பாளையத்தைச் சோ்ந்த பலராமன்(49), கீரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன்(35) ஆகிய மூவரை ஸ்ரீபெரும்புதுாா் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 27 பவுன் நகைகள், 331 கிராம் வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.