வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ.1.88 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.88 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.88 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், ரோஷணை அப்துல்கலாம் நகரைச் சோ்ந்தவா் தி.தீபா ஜெனிபா் (45). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், புதன்கிழமை வீட்டைபூட்டிவிட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காகச் சென்றாா். பிற்பகலில் தீபா ஜெனிபா் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து அவா் உள்ளே சென்று பாா்த்த போது, இரும்பு பீரோ திறந்த நிலையில், அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகைகள், 2 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், ரூ.1.88லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தீபா ஜெனிபருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.