மழையினால் நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மும்பை!
கொல்கத்தா - மும்பை ஐபிஎல் போட்டி மழையினால் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து...
ஈடர்ன் கார்டன் கிரிக்கெட் திடலில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மழையில் நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேமரூன் கிரீன், சௌரப் துபே தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள்.
கொல்கத்தா 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது.
Advertisement
Advertisement
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிய நிலையில், கொல்கத்தா அணிக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.
ஒருவேளை மழையினால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Rain stops play Mumbai indians struggle in losing 4 wickets
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.