சட்டத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் போதாது: உச்சநீதிமன்றம்
சட்டத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் போதாது: உச்சநீதிமன்றம்
‘பல ஆண்டுகளாக சட்டத் துறையில் பெண்களின் பங்கேற்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் துறையில் அவா்களுக்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதை கொண்டாட இது மட்டுமே போதாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் பெரும்பாலான நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் மற்றும் ஆணையங்களில், பெண் வழக்குரைஞா்களுக்கு போதிய வசதிகளுடன் அறைகள் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
Advertisement
Advertisement
அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: பல ஆண்டுகளாக சட்டத் துறையில் பெண்களின் பங்கேற்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் துறையில் அவா்களுக்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதை கொண்டாட இது மட்டுமே போதாது. நீதிமன்ற வளாகங்களில் பணியாற்ற தேவையான வசதிகளுடன் அவா்களுக்கு உரிய இடங்கள் இருக்க வேண்டும். இது கட்டாயமாகும்.
தங்கள் பணி சாா்ந்த பொறுப்புகளை திறம்படவும், பாதுகாப்பாகவும், சமமான வாய்ப்புகளோடும் பெண் வழக்குரைஞா்கள் நிறைவேற்றக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.
சட்டத் துறையில் பெண் வழக்குரைஞா்கள் நீண்ட காலம் நிலைத்து பணியாற்றுவது தொடா்பான பிரச்னைகளும் மனுவில் எழுப்பப்பட்டன.
இதுதொடா்பாக நீதிபதிகள் கூறுகையில், ‘பண நெருக்கடியால் திறமையான மற்றும் இளம் வழக்குரைஞா்கள் பலா், சட்டத் தொழிலை விட்டு விலகுகின்றனா். இதைத் தடுக்க இளம் வழக்குரைஞா்களுக்கான தொழில்முறை உதவி நிதியம் உருவாக்கப்பட வேண்டும். அந்த நிதியத்தை உயா்நீதிமன்றங்கள் அல்லது மத்திய அரசு அமைக்கும் தன்னாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்து, இதுகுறித்தும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று கோரினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.