மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மல்லிகார்ஜுன கார்கே!
மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றது பற்றி..
கர்நாடக மாநிலத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 29 (இன்று) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.
மாநிலங்களவைத் தலைவரும் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தனது அலுவலக அறையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்வின்போது, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement
மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கார்கே, கர்நாடக மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் இந்தியில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
பதவியேற்புக்குப் பிறகு கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்த ராதாகிருஷ்ணன், கார்கேவின் நீண்டகால அனுபவத்தால் நிச்சயம் பயனடையும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், அவையின் தலைவராகவும் செயல்படும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கார்கே உள்ளிட்ட நான்கு பேர் கர்நாடக மாநிலத்திலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸின் பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congress president Mallikarjun Kharge on Monday took oath as a member of the Rajya Sabha after his re-election.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.