கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுள்ளது குறித்து...
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 அன்று பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூன் 3) மாலை 4.05 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இத்துடன், கையில் இந்திய அரசியலமைப்பை ஏந்தியபடி டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றது பெருமளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி. வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Senior Congress leader D.K. Shivakumar took oath as the Chief Minister of Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.