முகப்பு
இந்தியா

மகளிர் இலவசப் பயணத்துக்கு எதிர்ப்பு... தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்ட அறிவிப்பு!

கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்டம் அறிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 6:05 pm IST
இலவசப் பேருந்தில்...
பகிர்:

கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசில் 2021-ல் அறிமுகப்படுத்த மகளிருக்கான இலவச விடியல் பேருந்து திட்டத்தைப் போன்று, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற வாக்குறுதியை அளித்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, இந்திரா உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெண்களுக்காக ‘பிரியதர்ஷினி திட்டம்’ என்ற இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை கடந்த ஜூன் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கேரள அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கேரளத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து.

தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் 687 சாதாரண பேருந்துகளும், ஒட்டுமொத்த தென் மாவட்டங்களில் 1,268 சாதாரண பேருந்துகள் இயங்குவதால், பெண்கள் அதிகளவில் பயணடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளம் முழுவதும் மொத்தமாக 3,125 பேருந்துகள் மகளிருக்கு இலவசமாக இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கேரளத்தில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் வருவாயை பெரிதும் பாதித்து, தங்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அரசுக்கு எதிராக வருகிற ஜூலை 20 ஆம் தேதி முதல் கேரளத் தலைமைச் செயலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தனியார் பேருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

பாலக்காட்டில், தனியார் பேருந்து ஊழியர்களின் ஊதியம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு ஒரு நாளைக்கு வெறும் ரூ. 600 ஊதியமாக வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் தீவிரத்தை அறிந்த போக்குவரத்து அமைச்சர் சி.பி. ஜான், இதுதொடர்பாக தனியார் பேருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

summary

The free travel scheme, Priyadarshini, introduced under the Congress government's Indira Guarantee Scheme, is currently being implemented on 3,125 ordinary KSRTC buses across Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments