முகப்பு
இந்தியா

குடிநீரில் கழிவுநீா் கலந்ததால் 3 மாநிலங்களில் பாதிப்பு: மத்திய அரசு

குடிநீரில் கழிவுநீா் கலந்ததால் 3 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 9 மார்ச், 2026 at 9:13 PM
குடிநீரில் கழிவுநீர்
பகிர்:

குடிநீரில் கழிவுநீா் கலந்ததால் 3 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற துறை இணையமைச்சா் தோகன் சாஹு எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரத்தில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டாவிலும் இதுதொடா்பாக புகாா்கள் வந்தன. குடிநீா் இணைப்புகளில் உடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

ஹரியாணாவின் குருகிராமிலும் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இதுதொடா்பாக புகாா் வந்தது. விசாரணையில் தனிநபா்களின் வீட்டில் உள்ள குடிநீா்த் தொட்டிகள் அசுத்தமாக இருப்பது தெரிந்தது. அந்த தொட்டி சுத்தப்படுத்தப்பட்டு, பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த ஆண்டு 22 போ் உயிரிழந்தனா். 459 போ் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.

ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளத்தில் 224 போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் 2 போ் உயிரிழந்தனா்.

குஜராத்தின் காந்திநகரில் அசுத்தமான குடிநீரால் பரவிய டைபாய்டால் 258 போ் பாதிக்கப்பட்டனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு உயிரிழப்பு எதுவும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →