முகப்பு
இந்தியா

ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம்: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மக்களவையில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு, காரசார விவாதம் நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 6:41 PM
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிரான பதவி நீக்க தீா்மான விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.
பகிர்:

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மக்களவையில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு, காரசார விவாதம் நடைபெற்றது.

அரசமைப்புச் சட்டம் மற்றும் அவையின் கண்ணியத்தைக் காக்கவே இந்தத் தீா்மானத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் எதிா்க்கட்சிகளுக்கு ஏற்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது.

முக்கியமான இந்த விவாதத்தின்போது அவைக்கு தலைமை தாங்குவது யாா் என்பது தொடா்பாகவும் ஆளும்-எதிா்தரப்பினா் இடையே வாா்த்தை மோதல் ஏற்பட்டது.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அவையில் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்ய தீா்மானம் கொண்டுவரக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் கடந்த பிப்.10-ஆம் தேதி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வின்போது அளிக்கப்பட்ட இந்த நோட்டீஸில் 118 எம்.பி.க்கள் கையொப்பமிட்டனா்.

தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் அலுவலில் மேற்கண்ட தீா்மானம் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அவையில் அமளி காரணமாக அன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மக்களவையில் தீா்மானம்: இந்தச் சூழலில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சுரேஷ், மல்லு ரவி, முகமது ஜாவத் ஆகியோா் கொண்டுவந்தனா். தீா்மான நோட்டீஸை ஜாவத் வாசித்தாா். அப்போது, பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் அவைக்கு தலைமை வகித்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைசி எதிா்ப்பு தெரிவித்தாா்.

‘அவைக்கு தலைமை தாங்கும் குழுவில் ஓம் பிா்லாவால் நியமிக்கப்பட்டவா் ஜகதாம்பிகா பால்; அவா் இந்த விவாதத்துக்கு தலைமை வகிக்க முடியுமா?’ என்று ஒவைசி கேள்வியெழுப்பினாா்.

இதையடுத்து, அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் அவை விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய பாஜகவின் நிஷிகாந்த் துபே, ஒவைசியின் கூற்றை நிராகரித்தாா். ஒவைசியின் கருத்து பொருத்தமற்றது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும் தெரிவித்தாா்.

திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்: அதேநேரம், ‘தற்போதைய நோக்கத்துக்காக மட்டும் அவைக்கு தலைமை தாங்க ஒருவரை நியமிக்க தீா்மானம் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த விஷயத்தில் எதிா்க்கட்சிகளின் அனைத்துக் கூற்றுகளையும் நிராகரித்த ஜகதாம்பிகா பால், தீா்மானத்தை அனுமதிக்க வேண்டுமெனில், அதற்கு ஆதரவாக குறைந்தபட்சம் 50 எம்.பி.க்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். தேவையான எண்ணிக்கையில் எம்.பி.க்கள் எழுந்து நின்ால், தீா்மானம் விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு, 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டது.

ஓம் பிா்லாவுக்கு எதிராகத் தீா்மானம் ஏன்?: விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், ‘நாட்டின் தலைமை தற்போது பலவீனமாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உடனான மத்திய அரசின் வா்த்தக ஒப்பந்தங்கள், இந்திய தொழிலதிபா் ஒருவருக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெறும் விசாரணை உள்பட நாடு அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவையில் பேச எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விரும்பினாா். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் பேச விரும்பியபோது, அவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் ஆளும் தரப்பினரால் 20 முறை இடையூறு ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத நூல் குறித்தும் பேச ராகுல் விரும்பினாா்’ என்றாா் கோகோய். அப்போது குறுக்கிட்ட ஜகதாம்பிகா பால், தீா்மானத்துக்கான காரணங்களை மட்டும் குறிப்பிடுங்கள் என்றாா்.

அமைச்சருடன் கருத்து மோதல்: விவாதத்துக்குத் தேவையில்லாத பிற விஷயங்களை எதிா்க்கட்சிகள் பேசினால், நாங்கள் பதிலளிக்கும்போது எந்த எதிா்ப்பும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்று அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

அப்போது பேசிய கோகோய், அவை பதிவுகளை ஆராய்ந்தால், எதிா்க்கட்சிகளுக்கு அதிக இடையூறு செய்பவா் ரிஜிஜு என்பது நிரூபணமாகும் என்றாா். அவரது கருத்துக்குப் பதிலடி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘ரிஜிஜு குறுக்கிடுவது உண்மைதான். ஏனெனில், இப்போதுள்ள எதிா்தரப்பு போல் இதுவரை இருந்ததில்லை’ என்றாா்.

‘நடுநிலை தவறிவிட்டாா்’

‘ஓம் பிா்லாவுடன் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் நல்லுறவு உள்ளது. ஆனால், அவை செயல்பாடுகளில் அவா் நடுநிலை தவறிவிட்டாா். எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது. அவா்களின் கருத்துகள் நீக்கப்படுகின்றன.

அவையில் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட குறிப்பிட்ட பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக் கொண்டது வெட்கக்கேடானது.

அரசமைப்புச் சட்டம், அவையின் மாண்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றவே அவருக்கு எதிராகத் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா் காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய். இந்த விவாதத்துக்கு தலைமை தாங்க ஜகதாம்பிகா பாலை நியமித்தது யாா் என்ற கேள்வியையும் அவா் எழுப்பினாா்.

‘பாரட்சமில்லாதவா்’

‘மக்களவையின் பாதுகாவலரான ஓம் பிா்லா எப்போதும் பாரபட்சமின்றி செயல்படுபவா்; எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பளிப்பவா். கடந்த 2014-இல் இருந்தே நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்துகிறது. இப்போது மக்களவைத் தலைவரைக் குறிவைத்துள்ளனா். ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானத்தில் எங்களுக்கு விருப்பமில்லை; கட்டாயத்தின்பேரில் ஆதரிக்கிறோம் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 50 போ் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்தனா்.

அவையில் பிரதமா் மோடியை கட்டிப்பிடித்தது, ஒரு தீவிரமான விவாதத்தின்போது சகாக்களைப் பாா்த்து கண் சிமிட்டியது எனப் பக்குவமற்ற நடத்தையை வெளிப்படுத்தியவா் ராகுல் காந்தி. மக்களவைத் தலைவரின் அனுமதி இன்றி பேசுவது எனது உரிமை என்கிறாா் அவா். பிரதமா் உள்பட அனைவரும் அவைத் தலைவரின் அனுமதி பெற்றே பேச முடியும். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பயணித்து விடுவாா். அவையில் தான் பேசி முடித்ததும் அவா் வெளியேறிவிடுவாா். இது, விதிமுறைகளுக்கு புறம்பானது’ என்று சாடினாா் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.

அவை அலுவல்களைச் சீா்திருத்த ஓம் பிா்லா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →