வன்முறை மூலம் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: பாஜக
பாரூக் அப்துல்லா மீதான தாக்குதலை பாஜக கடுமையாகக் கண்டித்தது பற்றி..
வன்முறை மூலம் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: பாஜகவன்முறை மூலம் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: பாஜக
வன்முறை மூலம் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தேசிய மாநாட்டுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா மீதான தாக்குதலை பாஜக கடுமையாகக் கண்டித்துள்ளது.
புதன்கிழமை இரவு ஜம்முவின் புறநகரில் உள்ள கிரேட்டர் கைலாஷில் திருமண விழாவிலிருந்து வெளியேறும்போது, அப்துல்லாவை பின்னால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் நூலிழையில் உயிர்த் தப்பினார்.
Advertisement
Advertisement
சம்பவம் நடைபெற்றபோது துணை முதல்வர் சுரீந்தர் சௌத்ரி மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவின் ஆலோசகர் நசீர் அஸ்லம் வானி ஆகியோரும் அப்துல்லாவுடன் உடன் இருந்தனர்.
ஐம்முவில் உள்ள புராணி மண்டியில் வசிக்கும் 63 வயதான கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக அப்துல்லாவை குறிவைக்கும் வாய்ப்புக்காக அவர் காத்திருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கூட்டத்தின்போது வழக்குரைஞர் சுனில் சேத்தி கூறுகையில்,
தலைவர்களைக் குறிவைக்கும் சம்பவம் கவலையளிக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அரசியல் வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும்.
பாஜக இதுபோன்ற செயல்களை உறுதியாக எதிர்க்கிறது, அமைதி மற்றும் ஜனநாயக செயல்பாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் கட்சி ஆதரிக்காது.
ஜம்மு காஷ்மீரில் ஆரோக்கியமான அரசியல் சூழலைப் பேண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வன்முறை மூலம் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
தாக்குதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை முறையாக ஆராயும் வகையில் சம்பவம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
The BJP on Thursday strongly condemned the attack on National Conference president and former chief minister Farooq Abdullah, saying "targeting political leaders through violence is unacceptable" and demanded a thorough probe into the incident.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.