இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை திசைதிருப்ப டிரம்ப் முயற்சி! - ஈரான் குற்றச்சாட்டு!
இந்திய கப்பல்கள் மீதான அமெரிக்க தாக்குதலை அதிபர் டிரம்ப் திசைதிருப்ப முயற்சிப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது...
இந்திய கப்பல்கள் மீதான அமெரிக்க படைகளின் தாக்குதலை திசைதிருப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிப்பதாக, ஈரான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை பகுதியில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) அன்று இந்திய கப்பல்கள் மீது அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்ட நிலையில், இந்தத் தாக்குதலை ஈரானிய படைகள் நடத்தியதாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தது சந்தேகத்தை எழுப்பியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை அதிபர் டிரம்ப் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும், அவரது குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது எனவும் இன்று (ஜூன் 13) இந்தியாவுக்கான ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது.
இது, 3 இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர் எனும் உண்மையைத் திசைதிருப்பும் முயற்சி. அது மிகவும் பரிதாபகரமானது” எனக் கூறப்பட்டுள்ளது.
The Iranian government has accused Trump of attempting to divert attention from the attack by US forces on Indian ships.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.