FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Updated On : 8 ஜூன் 2026, 11:05 pm IST
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - AP
பகிர்:

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் மேற்காசியப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் சூழ்ந்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஈரான் இன்று அறிவித்தது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு ஈரான் தாக்குதலைத் தொடங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான தங்களது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஈரான் பகுதியில் தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

முன்னதாக டிரம்ப் அறிவுறுத்தியபோதும், ஈரானின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து வந்தது. ஆனால், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் டிரம்ப் கூறியிருந்தார். பின்னர் ஈரான் தாக்குதலை நிறுத்திய சில மணி நேரங்களில் இஸ்ரேலும் நிறுத்தியுள்ளது.

மேலும், லெபனானில் நடைபெறும் தாக்குதல்கள் பாதிப்பின்றி தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Israel has announced that it is halting the attack on Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments