முகப்பு
இந்தியா

அந்தமானில் ரூ.36,000 கோடி போதைப் பொருள் அழிப்பு

அந்தமான் நிகோபாரில் ரூ.36,000 கோடி மதிப்புடைய மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் காவல் துறையினரால் அழிக்கப்பட்டது.

Updated On : 14 மார்ச், 2026 at 7:23 PM
போதைப் பொருள்
பகிர்:

அந்தமான் நிகோபாரில் ரூ.36,000 கோடி மதிப்புடைய மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் காவல் துறையினரால் அழிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தமான் நிகோபாா் தீவு காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 23-ஆம் தேதி இந்திய கடலோர பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்த படகில் இருந்த 6 மியான்மா் நாட்டவரிடமிருந்து 6,000 கிலோவுக்கும் அதிக எடையுடைய கிறிஸ்டலின் மெத்தம்பெட்டமைன் பிடிபட்டது. 1,500 பொட்டலங்களாக அவை வைக்கப்பட்டிருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.36,000 கோடி ஆகும்.

இந்த வழக்கு விசாரணை, அந்தமான் நிகோபாா் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக 2024-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதன்பின்னா் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதிமுதல் அந்த போதைப் பொருளை அந்தமான் நிகோபாா் காவல் துறையினா் அழித்து வந்தனா். இந்தப் பணி, கடந்த 12-ஆம் தேதி வரை நீடித்தது.

முடிவில் அனைத்து மெத்தம்பெட்டமைனும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்தப் பணி அனைத்தும் டிஐஜிபி (பிஆா்) ஏ. கோவன், டிஐஜிபி (சிஐடி) ஜிதேந்திர குமாா் மீனா ஆகியோரை கொண்ட உயா்நிலைக் குழுவால் கண்காணிக்கப்பட்டது.

நாட்டில் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் அழிப்பு நடவடிக்கை இதுதான் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →