நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் 7 பேர் பலி
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் 7 பேர் பலியாகினர்.
நேபாளத்தில் காத்மாண்டுவுக்கு மேற்கே 120 கி.மீ. தொலைவில் உள்ள ஷாஹித் லகான் கிராமத்துக்கு அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோயிலுக்குச் சென்றுவிட்டு, பேருந்தில் பயணித்த இந்தியர்கள் 7 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
மலைச் சாலையில் இருந்து கீழ்நோக்கி வந்த பேருந்து, வளைவில் திரும்பும்போது தவறி பள்ளத்தாக்கில் சுமார் 150 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மோசமான வாகனங்கள் மற்றும் பராமரிப்பில்லாத சாலைகளால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர்.
Nepal bus accident: 7 Indian pilgrims killed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.