கொலீஜியம் முறை இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!
தற்சமயம் இந்தியாவுக்கு கொலீஜியம் முறை மிகவும் பொருத்தமானது என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
தற்சமயம் இந்தியாவுக்கு கொலீஜியம் முறை மிகவும் பொருத்தமானது என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கா்நாடக மாநிலம் பெங்களூரில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் முதல் தேசிய மாநாடு-2026-இன் நிறைவு நிகழ்ச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
கொலீஜியம் முறை முற்றிலும் பிழையற்ற முறை என்று நான் கூறமாட்டேன். குறைகளே இல்லாத முறை என்பது இல்லவே இல்லை. ஒவ்வொரு முறைக்கும் அதற்கே உரிய சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. எனினும் எனது பல ஆண்டுகால பணி அனுபவத்தின் அடிப்படையில், தற்சமயம் இந்தியாவுக்கு கொலீஜியம் முறை மிகவும் பொருத்தமானது.
கொலீஜியம் தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. பதவி உயா்வு மற்றும் பணியிடமாற்றம் செய்ய வேண்டிய நீதிபதிகளின் பெயா்களை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் இரு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்கிறது. அதன் பின்னா் அந்தப் பெயா்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது.
அதுகுறித்து மத்திய அரசு, உளவுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துகள் மற்றும் தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு எடுக்கிறது.
பெயா்கள் பரிந்துரைக்கப்பட்ட பிறகும் கூட, அதில் அரசுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அவை கொலீஜியத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. அந்த ஆட்சேபங்களை கொலீஜியம் பரிசீலித்து இறுதி முடிவை மேற்கொள்கிறது என்று தெரிவித்தாா்.