வாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கைக்கு முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து...
வாக்குத் திருட்டு நடைபெற வாய்ப்பில்லை என்றும், வாக்கு எண்ணிக்கைக்கு முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு கண்காணிப்பாளர் சுப்ரதா குப்தா இன்று (மே 3) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
வாக்கு எண்ணிக்கைக்காக முழு வீச்சில் தயாராகியுள்ளோம். வாக்குத் திருட்டு நடைபெற வாய்ப்பில்லை. வாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடுகள் நடைபெறாது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக முடிந்துவிட்டன. அனைவரும் வாக்கு எண்ணிக்கைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுன் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
Advertisement
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்படவுள்ளன.
வாக்குப் பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. வாக்குச் சாவடியிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே. 2) அறிவித்தது.
அதாவது, மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மக்ராத் பஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் ஃபால்டா தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.