ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மரபை பாஜக தொடர்கிறது: சஞ்சய் ராவத
பாஜகவை கடுமையாக விமர்சித்த சிவசேனை தாலைவர் பற்றி..
ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மரபை பாஜக தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராவத்,
2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஸ்டிங் ஆபரேஷன் (ரகசியப் பதிவு நடவடிக்கை) ஒன்றில், சுவேந்து அதிகாரி உள்பட ஐந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் பணம் பெற்றதாகப் பதிவானது. இதையடுத்து அமலாக்கத்துறை சுவேந்து அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். இப்போது அவரே முதல்வராகியுள்ளார்.
Advertisement
Advertisement
சுவேந்து அதிகாரி மீதுள்ள குற்றங்கள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. ஊழல்வதிகளுக்கு அளிக்கும் தனது மரபை பாஜக தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இதைத் தொடர்வதற்கு அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும் என்று ராவத் கிண்டலடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், 294 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், கிழக்கு இந்தியாவில் தனது மிக முக்கியமான தேர்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
சிவசேனை தலைவரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நவ்நாத் பன்,
சுவேந்து அதிகாரி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை, ஆனால் சஞ்சய் ராவத் ஏற்கெனவே சிறையில் காலம் கழித்துள்ளார்.
மும்பையின் 'பத்ரா சாவ்ல்' மறுமேம்பாட்டுத் திட்டம் தொடர்பான பணமோசடி வழக்கில், 2022 ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினரால் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கும் வரை, அவர் மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்தார். கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கையில் இந்தியா கூட்டணியில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்ததைத் தொடர்ந்து, மிக முக்கியமான தருணத்தில் கூட்டணியின் முதுகில் குத்திவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மீது திமுக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
With Suvendu Adhikari taking oath as West Bengal Chief Minister, Shiv Sena (UBT) leader Sanjay Raut on Saturday hit out at the BJP, alleging that the saffron party kept up its tradition of giving power to corrupt people.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.