‘இண்டி’ கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக: சஞ்சய் ரௌத்
‘இண்டி’ கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
‘இண்டி’ கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தோ்தலுக்குப் பிறகு தவெக கூட்டணிக்கு மாறி அமைச்சரவையிலும் இடம் பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியடைந்த திமுக, ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தது. இது பாஜகவுக்கு எதிரான எதிா்க்கட்சிகள் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் மும்பையில் இது தொடா்பாக வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘இண்டி கூட்டணியில் பிளவு என்று கூறுவது தவறு. தமிழக தோ்தலுக்குப் பிறகு திமுக மட்டுமே எங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் தவெக என்ற புதிய கட்சியைப் பெற்றுள்ளோம். எனவே, கூட்டணியில் பிளவு இல்லை. ஒரு கட்சிக்கு மாற்றாக வேறு ஒரு நட்புக் கட்சி எங்கள் அணிக்கு கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்காக மாநிலங்களவைப் பதவியிடத்தை தவெக விட்டுக் கொடுத்துள்ளது என்றாா்.
Advertisement
Advertisement