பிகார்: ஐஐடி பாட்னா வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
ஐஐடி பாட்னா வாளகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி பாட்னா வாளகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், ஐஐடி-பாட்னா வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது, மின் கம்பத்தில் உரசி மாணவர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவர் தெலுங்கானாவின் சந்தாநகரைச் சேர்ந்த நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஹர்ஷித் ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
காலை 6 மணியளவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து அவர் மயங்கி விழுந்ததாக ஐஐடி-பாட்னா பாதுகாப்புப் பொறுப்பாளர் தீபக் குமார் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், அவர் நேதாஜி சுபாஷ் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று தெரிவித்தார். மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
A student died after allegedly coming in contact with an electric pole while playing cricket on the IIT-Patna campus on Saturday morning, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.