கேரள காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை: எம்.ஏ.பேபி
கேரள காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என எம்.ஏ. பேபி தெரிவித்தது குறித்து...
கேரள காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
காங்கிரஸ் கட்சியினுள் கேரளத்தின் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், கேரளத்தின் முதல்வராகப் பதவியேற்கப் போவது யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பேசிய எம்.ஏ. பேபி, “கேரளத்தில் முதல்வர் என்றொருவர் இருப்பார் என்பதற்கும், சட்டப்பேரவை கூட்டப்படும் என்பதற்கும் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே, நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்க முடியும்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
M.A. Baby, National General Secretary of the Marxist Communist Party, has stated that there is a lack of unity within the Kerala Congress alliance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.