எரிவாயு சிக்கனம்! பிரதமர் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு
நாடு முழுவதும் எரிவாயு சிக்கனத்தை வலியுறுத்தி, பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் 50 சதவிகிதமாகக் குறைப்பு
நாடு முழுவதும் எரிவாயு சிக்கனத்தை வலியுறுத்தி, பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் 50 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில், நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அணிவகுப்பில் பங்குபெறும் வாகனங்களில் 50 சதவிகித வாகனங்களைக் குறைக்குமாறும், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பெருமளவில் பயன்படுத்துமாறு சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், கட்டாயப் பாதுகாப்பில் எந்த மாற்றமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
அதுமட்டுமின்றி, இந்த மாற்றத்துக்காக புதிய வாகனங்களை வாங்க வேண்டாம் என்றும், இருப்பிலுள்ள வாகனங்களையே பயன்படுத்துமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தினால், அந்நிய செலாவணியை சேமிப்பதுடன், போரின் தாக்கங்களையும் குறைக்க முடியும் என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
PM Modi shrinks convoy, pushes EV use after call to reduce fuel consumption
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.