முகப்பு
இந்தியா

செஷல்ஸில் நவ விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

Updated On : 29 ஜூன் 2026, 2:10 pm IST
பிரதமர் மோடி
பகிர்:

செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

செஷல்ஸ் நாட்டுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் 50-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ஞாயிறன்று அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தலைநகரில் இருந்தபோது, இந்திய வம்சாவளி சமூகத்தினருடனும் பிரதமர் கலந்துரையாடினார். அன்பான வரவேற்புகளுக்கு மத்தியில், அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்த பிரதமர் மோடி, இந்தியாவையும் செஷல்ஸையும் இணைக்கும் வலுவான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

இதனிடையே, இன்று விக்டோரியா நகரில் நவசக்தி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். கோயிலில் பிரதமர் மோடிக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து சுவாமிகளையும் பிரதமர் மோடி வணங்கி வழிபட்டார். பின்னர், கோயிலுக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவழியினரைச் சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments