மாலுமிகள் பாதுகாப்பு: டிரம்ப்பிடம் பிரதமர் மோடி கேள்வி!
மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியது பற்றி...
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அஃமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துரையாடினர்.
முன்னதாக இந்திய வர்த்தகக் கப்பலின் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகப் பொருளாதாரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை திறப்பது இன்றியமையாது என்பதில் அனைவரும் உடன்படுகிறோம். கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதி செய்வதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தில் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு நீங்கள் பெரிய முயற்சிகளை மேற்கொண்டீர்கள். இந்த ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Prime Minister Narendra Modi raised the issue of the safety of seafarers with US President Donald Trump at the G7 summit currently underway in France.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.