ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு!
நீட் மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அண்மையில் அறிவித்திருந்தது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீட் மறுதேர்வு வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மாணவர்களும் பெற்றோர்களும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பின்தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், நீட் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என்றும், முந்தைய தரவுகளின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் என்டிஏ தெரிவித்திருந்தது.
மேலும், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஏற்கனவே செலுத்திய கட்டணமும் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
NEET Re-exam on June 21! NTA Announces!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.