நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடி எப்போது விவாதிப்பார்? - காங்கிரஸ்
நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடி எப்போது விவாதிப்பார்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...
நீட் தேர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எப்போது விவாதிப்பார்? என்று காங்கிரஸ் தலைவரும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் நீட் தேர்வானது கணினிவழியில் நடைபெறும் என்பதையும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது:
இது ஒரு மாபெரும் துயரம். இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெறவில்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்டது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஏன் இன்னும் ஒருவர்கூட ராஜிநாமா செய்யவில்லை?
22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு யார் பொறுப்பு? என் நண்பர்களின் குழந்தைகள் உள்பட பல மாணவர்கள், மீண்டும் தேர்வை எழுத மாட்டோம் என்று கூறுகிறார்கள். இரண்டு, மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நீட் பயிற்சி எடுத்து, இரவும் பகலும் படித்துவிட்டு தேர்வெழுதினால், அவர்கள் பணத்திற்காகக் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு விற்கிறார்கள்.
பிரதமர் மோடி எங்கே? தன்னை 'ஜென் ஸி' தலைமுறை என்று கூறிக்கொண்டும், 'நான் அவர்களுக்காக இருக்கிறேன்' என்றும் சொல்கிறார். அவர் எப்போது நீட் தேர்வு குறித்து விவாதிப்பார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Priyank Kharge, a Congress leader and Karnataka Minister, has raised the question: "When will Prime Minister Narendra Modi discuss the NEET examination?"
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.