முகப்பு
இந்தியா

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலியானது பற்றி...

நவ்யா கடுசு - EPS
பகிர்:

சிகாகோவில் படித்துவந்த இந்திய மாணவி சாலை விபத்தில் சிக்கி சனிக்கிழமை பலியானார்.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நவ்யா கடுசு (வயது 25), சிகாகோவில் தங்கிப் படித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இவருடன் பயணித்த 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

விபத்து நடந்தது எப்படி?

இண்டியானா மாகாணம், லேக் கவுண்டியில் உள்ள கிரவுன் பாயிண்ட் அருகே நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது:

”இயந்திரக் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த வாகனம் மீது நவ்யா உள்ளிட்டோர் சென்ற மினி வேன் மோதியுள்ளது. இதில், நிலை தடுமாறிய மினி வேன் சாலையோர வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மினி வேனின் முன்புறம் மட்டுமே இரண்டு இருக்கைகள் இருந்ததாகவும், பின்புறம் மாம்பழப் பெட்டிகள் மேல் 5 பேர் அமர்ந்து, சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நவ்யா, சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ்யாவின் மரணத்துக்கு சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

summary

Indian Student Killed in Chicago Road Accident!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments