FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எம்.எஸ். தோனியும் ஜோகோவிச்சும்... மனம் திறந்த தீப்தி சர்மா!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவின் பேட்டி குறித்து...

எம்.எஸ். தோனி, ஜோகோவிச். - படங்கள்: சிஎஸ்கே/ ஐசிசி, ஏபி.
பகிர்:

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, “டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியும் ஒரே மாதிரியான குணம் கொண்டவர்கள்” எனக் கூறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் கடந்த ஜூன் 22 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 39 வயதான நோவக் ஜோகோவிச் இரண்டு சுற்றுகளில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

விம்பிள்டன் போட்டிகளைப் பார்க்கச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

ஜோகோவிச் குறித்து பேசும்போது அனைவரும் அவரது மனதிடம் குறித்து பேசுகிறார்கள். எந்த விதமான சூழ்நிலையாக இருந்தாலும் அவர் தனது விடாமுயற்சியைத் தொடர்பவர். கிரிக்கெட்டில், எம்.எஸ். தோனி இதே மாதிரியானவர் என நான் நினைக்கிறேன்.

எம்.எஸ். தோனி மிகவும் அமைதியானவர். அழுத்தமான சூழ்நிலைகள் வந்தாலும் அவர் சிறப்பாகக் கையாள்வார். அதைப் பார்க்கும்போது அவர் அழுத்தமான சூழ்நிலையில் இருப்பதுபோலவே இருக்காது. அவ்வளவு எளிதாக அழுத்தங்களை எதிர்கொள்வார்.

ஜோகோவிச், தோனி இருவரிடமும் அழுத்தமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருந்தால், பலமாக இருத்தல் என்ற அதிசயமான குணாம்சங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன. அவர்கள் விளையாடுவதைப் பார்த்து, அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி உறுதியுடன் இருப்பதைக் கற்றுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

summary

Both Djokovic and Dhoni have that rare quality says Indian womens cricketer Deepti Sharma

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments