கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!
கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி. சதீசன் இன்று பதவியேற்றுக்கெண்டார்.
கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி. சதீசன் இன்று காலை பதவியேற்றுக்கெண்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத ஆர்லேகர் சதீசனுக்கு பதவிப்பிரமாணமும் ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதல்வருடன் ரமேஷ் சென்னிதலா, குஞ்ஞாலி குட்டி உள்ளிட்ட 20 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள் (கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம்), முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கே.சி. வேணுகோபால், கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இந்த மாநிலத்தில் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பதால் முதல்வர் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக நடந்த பேரவைத் தோ்தலில் 102 இடங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்டிஎஃப்) 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இடதுசாரி கூட்டணிக்கு வெறும் 35 இடங்களே கிடைத்தன. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, முந்தைய பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன், கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகிய மூவா் இடையே முதல்வா் பதவிக்கு கடும் போட்டி எழுந்தது.
10 நாள்களாக நீடித்த இழுபறிக்குப் பின்னா் புதிய முதல்வராக சதீசன் (61) கடந்த 14-ஆம் தேதி தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான அரசு இன்று பதவியேற்றுக்கொண்டது.
Congress leader V.D. Satheesan took oath as the Chief Minister of Kerala at 10 a.m. at the Central Stadium in Thiruvananthapuram on Monday (May 18, 2026), taking helm of the State’s UDF Government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.